/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறப்பு ரயில் நடு வழியில் நிறுத்தம்
/
சிறப்பு ரயில் நடு வழியில் நிறுத்தம்
ADDED : ஜன 06, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சிறப்பு ரயிலில் அடையாளம் தெரியாத பயணி அபாய சங்கிலியை இழுத்ததால், ரயில் தாமதமாக சென்றது.
சென்னை எக்மோரிலிருந்து நேற்று மாலை திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் (06069) புறப்பட்டது. இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்ற போது, பயணிகளில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். அதனால் ரயில் நிறுத்தப்பட்டது.
ரயிலில் இருந்த கார்டு ஒவ்வொரு பெட்டியாக சென்று, விசாரணை நடத்தினார். ஆனால், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார் என்பது தெரியவில்லை. அதனால், 10 நிமிட தாமதத்திற்கு பிறகு 5:25 மணிக்கு புறப்பட்டு சென்றது.