ADDED : நவ 21, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர் : திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில், வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நாளை 22ம் தேதி பல்கலைக்கழக தேர்வு துவங்குகிறது.
இந்த மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வை எதிர்கொள்வது குறித்து பயிற்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, பல்கலைக்கழக தேர்வை எப்படி எழுத வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்தும், தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்தும் பேசினார்.
இதில், கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.