/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
/
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
ADDED : டிச 06, 2024 05:03 AM
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
புயல், மழை மற்றும் வௌ்ளத்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், 445 கால்நடைகள், 1,24,715 கோழியினங்கள் இறந்துள்ளன. அதனையொட்டி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 156 கால்நடை மருந்தகங்களின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நேற்று 4ம் தேதி முதல் தினசரி ஒரு முகாம் வீதம் 10ம் தேதி வரை 1092 சிறப்பு சுகாதார மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கரூர் பகுதிகளில் இருந்து 15 மருத்துவக்குழுக்கள் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களில் இணைந்து செயல்பட உள்ளனர்.
கால்நடை வளர்ப்போர்கள் மற்றும் விவசாயிகள், தங்களின் கால்நடைகளை முகாம்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.