/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது
ADDED : நவ 16, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சாருமஜிம்தார் தலைமையில் போலீசார், நேற்று காலை விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பொது மக்களை அச்சுறுத்தும் விதத்தில் வேகமாக பைக் ஓட்டி வந்த, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை, ஸ்டாலின் நகரை சேர்ந்த சந்திரன் மகன் முரளி, 23; என்பவரை பிடித்தனர்.
விதிமீறி வாகனம் ஓட்டிய அவர் மீது வழக்கு பதிந்த மேற்கு போலீசார், அவரை கைது செய்தனர்.

