
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் வரவேற்றார். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி சிலம்பாட்டம், மாறுவேட போட்டிகள் மற்றும் மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடுவது பெற்றோர்களா, ஆசிரியர்களா தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது.
கையெழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சந்தோஷ் சான்றிதழ் வழங்கினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

