/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளவாரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
/
வெள்ளவாரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
வெள்ளவாரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
வெள்ளவாரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ADDED : நவ 16, 2025 11:22 PM

திண்டிவனம்: பெலாக்குப்பம் ரோடு, வெள்ளவாரி வாய்க்காலிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நகரின் மையப் பகுதியில் ராஜாங்குளம் உள்ளது. இதில் ராஜாங்குளத்திற்கு வரும் வெள்ளவாரி வாய்க்கால், நீர் வரத்து வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் ராஜாங்குளத்திற்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
இதற்கிடையில், பொலக்குப்பம் ரோடு, வெள்ளவாரி வாய்க்காலின் குறுக்கே பலர் கடைகள்,ெஷட்டுகள், வீட்டிற்கு எதிரில் சிமெண்ட் பிளாக் போட்டு, வாய்கால் தெரியாத அளவிற்கு மூடி வருகின்றனர்.
இதனால் அந்த வாய்க்காலில் அதிக அளவில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அகற்ற முடியாமல், சாக்கடை நீர் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெலாக்குப்பம் வெள்ளிவாரி வாய்க்காலிலுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை துார்வாரி, சுத்தப்படுத்த நகாரட்சி அதிகாரிகள் நடவடக்கை எடுக்க வேண்டும்.

