/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் கிளைச் சிறைச்சாலையில் நிழற்குடை அமைத்து தரப்படுமா?
/
திண்டிவனம் கிளைச் சிறைச்சாலையில் நிழற்குடை அமைத்து தரப்படுமா?
திண்டிவனம் கிளைச் சிறைச்சாலையில் நிழற்குடை அமைத்து தரப்படுமா?
திண்டிவனம் கிளைச் சிறைச்சாலையில் நிழற்குடை அமைத்து தரப்படுமா?
ADDED : நவ 16, 2025 11:17 PM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையிலுள்ள கிளைச்சிறைச்சாலை அருகே பார்வையாளருக்காக தனியாக நிழற்குடை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க.,ஆட்சியில் ஜக்காம்பேட்டையிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ள பகுதியில்,இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 8.39 கோடி ரூபாய் செலவில், காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் புதிய கிளைச் சிறை கட்டப்பட்டது. புதிய கிளை சிறையில் 200 விசாரணைக் கைதிகளை வைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
புதியதாக கட்டப்பட்டுள்ள கிளைச்சிறை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2024 ஜூலை 19ல், காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணை கைதிகளை உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிடுவதற்கு தினந்தோறும் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் உடனடியாக உள்ளே செல்ல முடியாது, சிறை அதிகாரிகள் அனுமதி கிடைத்தால்தான் உள்ளே செல்ல முடியும். இதற்காக பார்வையாளர்கள் நுழைவாயில் அருகே வெட்ட வெளியாக உள்ள இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது.
நுழைவாயில் அருகில் பார்வையாளர்கள் பொறுமையாக காத்திருந்து உள்ளே செல்வதற்கு, அங்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தும், இதுவரை நிழற்குடை அமைப்பதற்கான அந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திண்டிவனம் கிளைச்சிறை நுழைவாயில் அருகே பொது மக்கள் பயன்பெறும் வகையில், நிழற்குடை அமைத்து தருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

