ADDED : டிச 09, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மேம் பாலத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக போக்குவரத்திற்கும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த கடலுார் மாவட்டம், உள்ளேரிப்பட்டைச் சேர்ந்த குணசேகரன் மகன் வாஞ்சி நாதன், 25; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

