/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
/
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
ADDED : ஜூன் 26, 2025 02:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்துள்ளதால் சிறுவர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம், நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது.
பூங்காவிற்கு வரும் சிறார்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஆங்காங்கே உடைந்து கிடக்கும் நடைபாதையில் நடந்து செல்வோர் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். பூங்காவில் புதர்கள் மண்டியுள்ளது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.