/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
/
கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
ADDED : மே 04, 2025 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
விழுப்புரம், வழுதரெட்டியில், விவசாய நிலத்தில் திறந்த நிலையில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் நேற்று காலை 10:00 மணியளவில் புள்ளிமான் தவறி விழுந்து.
தகவலறிந்து வந்த தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, மானை உயிரோடு மீட்டு, விழுப்புரம் வனத்துறையினரிடம், ஒப்படைத்தனர். கோடை வெயிலில் குடிநீர் தேடி வந்தபோது, இந்த மான் தவறி விழுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.