ADDED : ஏப் 15, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே அரசு பஸ் மோதி, இலங்கை அகதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முத்துக்குமரன், 32; கூலித்தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி பிரேமா என்ற மனைவி உள்ளார். முத்துக்குமரன் நேற்று காலை இ.சி.ஆரில் அன்னிச்சங்குப்பம் அருகே சாலையை கடந்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ், முத்துக்குமரன் மீது மோதியது.
தூக்கி வீசப்பட்டவரை பொதுமக்கள் மீட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே முத்துக்குமரன் உயிரிழந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.