/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராமப்புற மக்களின் கனவை நினைவாக்கும் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனங்கள்
/
கிராமப்புற மக்களின் கனவை நினைவாக்கும் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனங்கள்
கிராமப்புற மக்களின் கனவை நினைவாக்கும் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனங்கள்
கிராமப்புற மக்களின் கனவை நினைவாக்கும் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனங்கள்
ADDED : அக் 01, 2025 01:05 AM

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களின் கல்வி கனவை நினைவாக்கும் வகையில் துவங்கப்பட்டது. கல்லுாரி தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி, செயலாளர் வழக்கிறஞர் ஸ்ரீபதி ஆகியோரின் சிறந்த நிர்வாகத்தினால் கல்வியில் சாதனை படைத்து வருகின்றனர்.
இது குறித்து தாளாளர் ரங்கபூபதி கூறியதாவது:
ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்கள் சார்பில் பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி, பார்மசி கல்லுாரி, நாசிங் கல்லுாரி, டிப்ளமோ மெடிக்கல் காலேஜ், கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரி, இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகியன இயங்கி வருகின்றன.
என்.ஏ.ஏ.சி., - பி பிளஸ் கிரேடு தரச்சான்று பெற்ற பொறியியல் கல்லுாரியில் சிவில், சி.எஸ்.இ., மெக்கானிக், இ.சி.இ., எலக்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக், பி.இ.ஏ.ஜெ.டி.எஸ்., சி.எஸ்.இ. (சி.எஸ்.) பிரிவுகள் உள்ளன.
பாலிடெக்னிக் கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் என்ஜினியரிங் ஆகிய பிரிவுகள் உள்ளன. பார்மசி கல்லுாரியில் டி.பார்ம், பி. பார்ம் மற்றும் எம்.பார்ம் வகுப்புகள் உள்ளன.
நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் (ஜி.என்.எம்), ஏ.என்.எம்., பிரிவுகள் உள்ளன.
அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த விளையாட்டு மைதானம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
ஓவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரிவிற்கும் தனிதனியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தந்துள்ளோம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை மூலம் பயிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளிலும் தொடர்ச்சியாக 96 சதவீதத்துக்கு மேல் மாணவர்கள் தேர்ச்சி, பெற்று வருகின்றனர். தேசிய தரச்சான்று பெற்று கல்லுாரிகளை சிறப்புடன் நடத்தி சாதனை படைத்து வந்துள்ளோம்.
விரைவில் தன்னாட்சி கல்லுாரியாக செயல்பட உள்ளது. ஸ்ரீரங்க பூபதி சி.பி.எஸ்.இ., இன்டர்நேஷனல் பள்ளி, மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியன்று மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.