ADDED : அக் 01, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்; புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுகுமாரன், 40; இவருக்கு தமிழகப்பகுதியான வானுார் அடுத்த பூத்துறை பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் சவுக்கை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு சுகுமாரன் சென்றுள்ளார்.
அப்போது, நிலத்தில் இருந்த மோட்டார் கொட்டகையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டாட்டர், மின் ஒயர்கள், பித்தளை பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரமாகும். இது குறித்து அவர் நேற்று ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.