/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் : கலெக்டர் 'திடீர் ஆய்வு'
/
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் : கலெக்டர் 'திடீர் ஆய்வு'
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் : கலெக்டர் 'திடீர் ஆய்வு'
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் : கலெக்டர் 'திடீர் ஆய்வு'
ADDED : அக் 01, 2025 01:04 AM

திண்டிவனம்; கழிவு நீர் சுத்தகரிப்பு நிலைய செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் நகராட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.265 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளது.இந்த திட்டத்திற்காக சலவாதி ரோட்டில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று, செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து கலெக்டர், 10வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் மல்லாண்குட்டை குளத்தினை பார்வையிட்டார் .
ஆய்வின் போது, நகாராட்சி ஆணையாளர் சரவணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் மோகன்ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா உடனிருந்தனர்.