/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்கள் மீது விரைந்து தீர்வு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்கள் மீது விரைந்து தீர்வு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்கள் மீது விரைந்து தீர்வு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்கள் மீது விரைந்து தீர்வு
ADDED : ஆக 17, 2025 10:37 PM

விழுப்புரம் : கோலியனுார் ஒன்றியம், கண்டமானடி ஊராட்சியில், சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது' என்றார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணப்படும். கண்டமானடி ஊராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு சில கோரிக்கைளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்புகள், ஒரு விவசாயிக்கு வெண்டை விதை தொகுப்பு, காய்கறி விதை தொகுப்புகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டன.