/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : டிச 28, 2025 05:21 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வா.பகண்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முகாமில் வா.பகண்டை, வாக்கூர், எஸ்.எஸ்.ஆர்., பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத், டாக்டர் ஆறுமுகம், பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், ஊராட்சி தலைவர்கள் சீனுவாசன், ராமச்சந்திரன், பானுமதி ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் நீதி கோபிநாத், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, ஆதி திராவிட அணி துணை அமைப்பாளர் ஏகாம்பரம், நிர்வாகிகள் வினாயகமூர்த்தி, ரமணன், சிலம்பரசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

