/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடலாடிகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
கடலாடிகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஜூலை 29, 2025 10:47 PM

செஞ்சி; செஞ்சி ஒன்றியம், பாக்கம், செம்மேடு, புத்தகரம், சே.பேட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கட லாடிகுளத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபாசங்கர் முன்னிலை வசித்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, வேளாண் துறை சார்பில் பழமரகன்றுகள், விதைகளை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன், டிலைட், ஊராட்சி தலைவர்கள் அஞ்சலை செல்வகுமார், சந்தானம், நீலாவதி பஞ்சாட்சரம், காசிநாதன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.