/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஜூலை 23, 2025 11:29 PM

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி ஒன்றியத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட சேர்மன் துவக்கி வைத்தார்.
சிந்தாமணி சமுதாய கூடத்தில் நடந்த முகாமிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.
உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், துணை சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ.,சையது முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமினை துவக்கி வைத்து பேசினார்.
சிந்தாமணி, வடகுச்சிபாளையம், அய்யூர் அகரம், முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அரசு அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
முகாமில் தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக நல தாசில்தார் வேல் முருகன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ., பாபு, இளநிலை உதவியாளர் தமிழ்செல்வி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன்,ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால் ,ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, சாவித்திரி, ஒன்றிய தலைவர் முரளி, இளைஞரணி அமைப்பாளர் பாரதி, தொழில் நுட்ப அணி சாம்பு, கபிலன், சுற்றுசூழல் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், அண்ணா, சக்திவேல், சீனுவாசன், அசோக்குமார், வேல்முருகன்,ராஜ் காந்த், சுதாகர், சங்கர், கலைச்செல்வன், சந்திரன், சுப்பிரமணி, பன்னீர், இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.