/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஜூலை 26, 2025 03:45 AM

செஞ்சி : அனந்தபுரம் பேரூராட்சி யில் முதல் கட்டமாக 1 முதல் 7 வரையிலான வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அமுதா கல்யாண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கலையரசி வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
முகாமில், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், முகாம் கண்காணிப்பாளர் ஆனந்தி, தி.மு.க, நகர தலைவர் கல்யாண்குமார், பொருளாளர் பாபு ஐயர், பேரூராட்சி கவுன்சிலர் தனலட்சுமி அறிவழகன், நிர்வாகிகள் மணிமாறன், அறிவழகன், கன்னியப்பன், தட்சணாமூர்த்தி, நேரு, விஜயகுமார், ஹரிராமன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் ரவி, மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா ஆகியோர் பங்கேற்றனர்.
வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு அரசு துறையினர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.