/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூனிமேடு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
கூனிமேடு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஜூலை 20, 2025 09:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது.
முகமிற்கு மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை சார்ந்த அதிகாரிகளிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் முன்னிலை வகித்தார். கூனிமேடு ஊராட்சி தலைவர் கஸ்துாரி ஜெயராமன் வரவேற்றார். வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வம், கவுன்சிலர் விஜயா உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர்.