ADDED : செப் 02, 2025 09:57 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில்,தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
நகராட்சி 11, 25வது வார்டு பகுதிகளுக்கு, கே.ஆர்.மகாலில் நடந்த முகாமை தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதையும், துறை சார்ந்த அரங்குகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இந்த முகாமில் தாசில்தார் கனிமொழி, நகராட்சி ஆணையர் வசந்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
நகர சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, தி.மு.க., சிறுபான்மையினர் அணி தாஹிர், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகர் மன்ற கவுன்சிலர்கள் உஷாராணி மோகன், மணி, சாந்தராஜ், வார்டு செயலாளர்கள் இசாக், அஹமது, ரமேஷ், நகர இளைஞரணி மோகன்ராஜ், வீரப்பன், லட்சுமிபதி, ரவீந்திரன், சாகுல் ஹமீது, விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் மலர்விழி சண்முகம், முபாரக், முத்துசாமி, வழக்கறிஞர் அணி ராகஜா, மீனவரணி கொளஞ்சி, அயலக அணி ரஞ்சித்குமார், தகவல் தொழில் நுட்ப அணி மக்களன்பன், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.