ADDED : அக் 03, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த தோகைப்பாடி ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது.
முகாமிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தாசில்தார் கனிமொழி, பி.டி.ஓ., ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.
இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், தொண்டரணி அமைப்பாளர் கபாலி, விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், ஊராட்சி தலைவர்கள் பாஞ்சாலி பிரசன்னா, தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.