ADDED : அக் 11, 2025 06:52 AM

விழுப்புரம் : பூவரசங்குப்பத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விழுப்புரம் சட்டசபை தொகுதி, கண்டமங்கலம் ஒன்றியம், பூவரசங்குப்பம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நேற்று நடந்தது.
தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முகாமை தொடங்கி வைத்து, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார். இந்த முகாமில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கண்ணப்பன், ஒன்றிய சேர்மன்கள் கண்டமங்கலம் வாசன், கோலியனுார் சச்சிதானந்தம், கண்டமங்கலம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட விவசாய அணி கேசவன், மாவட்ட நெசவாளர் அணி கனராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார், பூவரசங்குப்பம் ஊராட்சி தலைவர் ஜேசுதாசன், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் கிரண்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன், சச்சிதானந்தம், முத்துசாமி, ஊராட்சி தலைவர் லிங்கேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி கிருஷ்ணமூர்த்தி, விவசாய அணி பிரபா, விளையாட்டு மேம்பாட்டு அணி முனீஸ், தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்தராஜ், சுந்தரமூர்த்தி, கருணாமூர்த்தி, பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.