/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான கட்கா விளையாட்டு பயிற்சி முகாம்
/
மாநில அளவிலான கட்கா விளையாட்டு பயிற்சி முகாம்
ADDED : நவ 10, 2025 03:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., உள்விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான கட்கா பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பங்கேற்றனர்.
முகாமிற்கு, தமிழ்நாடு அமைச்சூர் கட்கா கழக மாநில தலைவர் சோலை தலைமை தாங்கினார். செயலாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், கட்கா பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.
பயிற்சியை சிறப்பாக முடித்த மாணவ, மாணவியர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கட்கா விளையாட்டு எஸ்.ஜி.எப்.ஐ., கேலோ இந்தியா ஆகிய விளையாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இந்த விளையாட்டில் மாண வர்கள் நேரடியாக மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான போட்டியில் பங் கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பெருமளவு இந்த கட்கா விளையாட்டு இல்லாததால், விழுப்புரத்தில் இந்த பயிற்சி முகாம் மூலம் இந்த விளையாட்டை மேம்படுத்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடு களை, விழுப்புரம் மாவட்ட கட்கா கழகம் செய லாளர் அன்பரசி செய்தார்.

