/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு 1,003 பேர் ஆப்சென்ட்
/
இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு 1,003 பேர் ஆப்சென்ட்
இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு 1,003 பேர் ஆப்சென்ட்
இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு 1,003 பேர் ஆப்சென்ட்
ADDED : நவ 10, 2025 03:37 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த சீருடை பணியாளர் தேர் வில் 1003 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு நேற்று நடந்தது.
3,644 மற்றும் 21 பழங்குடியினருக்கான காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்விற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் விண்ணப்பித்த, 8,361 ஆண்கள், 2,498 பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 859 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில், 8 தேர்வு மையங்களில் தேர்வு நடந்து. தேர்வெழுத, தேர்வர்கள் மையத்திற்கு காலை 9:00 மணிக்கு வந்த தேர்வர்களை, பாதுகாப்பு பணிகளில் இருந்த போலீசார், தீவிரமாக சோதனை செய்து, மையத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
தேர்வை 7,548 ஆண்கள், 2,308 பெண்கள் என 9,856 எழுதினர். இதில், 812 ஆண்கள், 191 பெண்கள் என 1,003 பேர் ஆப்சென்ட்.
தேர்வு மையங்களை டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

