/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில மல்லர் கம்பம் வீராங்கனையர் அசத்தல்
/
மாநில மல்லர் கம்பம் வீராங்கனையர் அசத்தல்
ADDED : அக் 06, 2025 02:04 AM

விழுப்புரம்: மாநில மல்லர் கம்பம் போட்டியில் விழுப்புரம் வீராங்கனை கள் வெற்றி பெற்றுள்ளனர்.
விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா, 14; பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா, 17; மல்லர் கம்பம் வீராங்கனைகளான இருவரும், கடந்த செப்., 30ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் நடந்த மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், பல மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், மதுமிதா, பவித்ரா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.
மேலும் இவர்கள், நவம்பர் மாதம், மகராஷ்டிரா மாநிலம், உஜ்ஜயினில் நடக்கவுள்ள தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
இந்த இருவரும் நேற்று பொன்முடி எம்.எல். ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில், ஆனாங்கூர் ஊராட்சி தலைவர் கனிமொழி வெங்கடேசன், பயிற்சியாளர்கள் செந்தமிழ் அன்பு, பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.