/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் அதிநவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
/
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் அதிநவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் அதிநவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் அதிநவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
ADDED : செப் 19, 2024 11:15 PM
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தினமும் விழுப்புரம் மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மருத்துவ மனையில் விபத்து காலங்களில் அல்லது மிக முக்கியமான சிகிக்கைக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 2010ம் ஆண்டு துவங்கியது போது, 2007ம் ஆண்டு மாடல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நிறுவப்பட்டு அதன் மூலம் டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து சிகிச்சைஅளித்து வந்தனர்.
தற்போது அதிநவீன தொழில் நுட்பத்தில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன்கள் வந்துள்ளது. இதனால், மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேனை இயந்திரத்தை அப்புறப்படுத்தி விட்டு அங்கு 2024 மாடல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி இன்னும் 45 முதல் 50 நாட்களில் முடிவடையும் என ஸ்கேன் இயந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள டெக்னீஷியன்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு நவீன தொழில்நுட்பட எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் நிறுவப்பட்டால் , கூடுதலாக நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க முடியும்.
பழைய எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் ஒரு நோயாளிக்கு ஸ்கேன் எடுக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். தற்போது நிறுவப்படும் ஸ்கேன் மூலம் 15 முதல் 20 நிமிடங்களில் ஸ்கேன் எடுத்து உடனடியாக ரிப்போர்ட் கொடுக்க முடியும்.
இதனால் நோயாளிக்க தேவையான சிகிச்சையை டாக்டர்கள் தொய்வின்றி அளிக்க முடியும்.
தற்போது, மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இல்லாததால் நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார் மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், கடும் சிரமம் அடைகின்றனர்.
அதே நேரத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அமைக்கப்படும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை விரைந்து பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.