ADDED : ஆக 29, 2025 11:37 PM

விழுப்புரம் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 48 மணிநேர தொடர் வேலை நிறுத்த போராட்ட பிரசார கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகியகால அவகாசத்தில் அதிகமான முகாம்களை நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும்;
இத்திட்ட பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வழங்க வேண்டும்; என்பது உள்ளிட்ட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 3 மற்றும், 4ம் தேதிகளில், 14 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.