/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் மாணவிகள் செறிவு விழா
/
மகளிர் கல்லுாரியில் மாணவிகள் செறிவு விழா
ADDED : ஜூலை 12, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான செறிவு விழா நடந்தது.
கல்லுாரி துணை முதல்வர் செல்வி வரவேற்றார். இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, கல்லுாரியின் சிறப்புகள் குறித்து பேசினார்.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி முதல்வர் அகிலா, மாணவிகளுக்கான கல்விசார் அறிவுரைகள், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பேசினார்.
மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.