ADDED : டிச 15, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவர் இறந்தார்.
கண்டமங்கலம் அடுத்த ராம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் நிர்மல், 14; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை நிர்மல் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் உட்பட 4 பேர் அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தனர் .
அதில் நிர்மல் புதை மணலில் சிக்கி நீரில் மூழ்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர்.
தகவலறிந்து வந்த கண்டமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றின் மறுகரையில் பகண்டை பகுதியில் இருந்து நிர்மல் உடலை மீட்டனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

