/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
ADDED : செப் 25, 2024 03:39 AM

விழுப்புரம் : மயிலம் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
கல்லுாரி கூட்டரங்கில் நடந்த விழாவிற்கு, தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர், கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், அறங்காவல் குழு உறுப்பினர்கள் நிலா ப்ரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குனர் செந்தில் பேசினார். கல்லுாரி முதல்வர் ராஜப்பன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினர் டி.சி.எஸ்., நிறுவனத்தின் மனித வளத்துறையின் பொது மேலாளர் தீபக்நாதன், கவுரவ விருந்தினர் கேம்பஸ் ரெக்ரூமென்ட் லீட் ஐடி நிர்வாகி விமல்ராஜ் நடைமுறையில் உள்ள தொழிநுட்பங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வருங்கால எதிர்பார்ப்புகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக அவர்களுக்கு, கல்லுாரியில் உள்ள அப்துல் கலாம் மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி, மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் கல்லுாரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் நன்றி கூறினார்.