ADDED : ஜன 05, 2025 05:13 AM

செஞ்சி : சத்தியமங்கலம் அரசு பள்ளியில் சிங்கப்பூர் சென்று வந்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு மாணவி லித்திஷா கடந்த மார்ச் மாதம் அரசு சார்பில் நடந்த திரைமன்ற போட்டியில் சிறந்த திரைக்கதைக்காக மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அரசு சார்பில் வெளிநாடு செல்வதற்கு தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டு டிச. 23 தேதி முதல் 27 ம் தேதி வரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சிங்கப்பூர் சென்ற 42 மாணவர்களில் லித்திஷாவும் இடம் பிடித்தார். அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
விழாவுக்கு தலைமையாசிரியர் ஜீவேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அபர்ணா ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மாணவிக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். மேலாண்மைக் குழு தலைவர் அம்சலேக்கா, பி.டி.ஏ., தலைவர் சிற்றரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

