/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய வில்வித்தை போட்டியில் சாதித்த மாணவருக்கு பாராட்டு
/
தேசிய வில்வித்தை போட்டியில் சாதித்த மாணவருக்கு பாராட்டு
தேசிய வில்வித்தை போட்டியில் சாதித்த மாணவருக்கு பாராட்டு
தேசிய வில்வித்தை போட்டியில் சாதித்த மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 10, 2025 09:48 PM

விழுப்புரம்; இந்திய பள்ளிகளுக்கிடையே நடந்த வில்வித்தை விளையாட்டுப் போட்டியில் சாதித்த விழுப்புரம் நகராட்சி பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளியில், கடந்த 1975ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வழங்கினர். பள்ளியில் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும், தாங்கள் பயின்ற காலத்தில் ஸ்கூல் பீப்பிள் லீடராகவும் மற்றும் சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்த குமரேசன் நினைவாக, விளையாட்டில் சாதித்த மாணவருக்கு கோப்பை வழங்கப்பட்டது.
இந்திய பள்ளிகளுக்கிடையே நடந்த வில்வித்தை போட்டியில் பங்கேற்று சாதித்து வந்துள்ள பிளஸ் 2 மாணவர் ரோகித்துக்கு, முன்னாள் மாணவர் குமரேசன் மூலம், பரிசு கோப்பை வழங்கி பாராட்டினர்.
தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரன், முதுகலை ஆசிரியர் பசுபதி, உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரகாஷ், ராமன், மாணவர் ரோகித்தின் பெற்றோர் சந்தோஷ்குமார், மகாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.