/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
/
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
ADDED : அக் 23, 2024 05:43 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான வகையில் பயணிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரத்திலிருந்து பாணாம்பட்டு வழியாக பில்லுார் செல்லும் அரசு டவுன் பஸ்சில், தினசரி சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
தினசரி, காலை, மாலை அலுவல் நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளதால், பலர் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் மட்டும் கூடுதல் நடையாக பஸ் விட்டுள்ள நிலையில், மீண்டும் படிக்கட்டில் தொங்கிச்செல்வது வாடிக்கையாக உள்ளது.
இதே போல், நேற்று மாலை 5:00 மணிக்கு விழுப்புரத்திலிருந்து பில்லுார் சென்ற அரசு டவுன் பஸ்சில், படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான நிலையில் சென்றனர்.
அவர்களை மேலே ஏறி வரும்படி, பஸ் டிரைவர் நிறுத்தி எச்சரித்தார். ஆனாலும், அவர்கள் உள்ளே செல்லவில்லை.
பில்லுார் மார்க்க பஸ்சில், கூட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி செல்கின்றனர்.
அவர்களை உள்ளே ஏறி வரும்படி கூறினால், ஆபாசமாக திட்டுகின்றனர் என, டிரைவர், கண்டக்டர் வேதனை தெரிவித்தனர்.
எனவே, மாணவர்கள் ஆபத்தான நிலையில், பஸ் படியில் தொங்கி செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.