/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்: வைரலாகும் வீடியோ
/
அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்: வைரலாகும் வீடியோ
அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்: வைரலாகும் வீடியோ
அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்: வைரலாகும் வீடியோ
ADDED : அக் 09, 2024 11:15 PM

செஞ்சி: பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் விடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செஞ்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து செஞ்சிக்கு வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பல கிராமங்களுக்கு செல்லும் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். நேற்று முன்தினம் காலை விழுப்புரத்தில் 8 மணிக்கு புறப்பட்டு செஞ்சிக்கு வந்த அரசு பஸ் (தடம் எண் 317) வரும் வழியில் மாணவர்களையும், பயணிகளையும் ஏற்றி வந்தது.
இந்த பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கெட்டில் நிற்கவும் இடமின்றி பஸ்சின் மேற்கூரைவரை ஏறி நின்றபடியும், ஆபத்தான வகையில் படிகளில் தொங்கியபடியும் பயணம் செய்தனர்.
அப்போது பஸ்சின் பின்னால் பைக்கில் வந்தவர்கள் இதை வீடியோ எடுத்துள்ளனர்.
மாணவர்களின் இந்த ஆபத்தான பயணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீர்வு எப்போது
விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து காலையில் பள்ளி நேரத்தில் செஞ்சிக்கு வரும் அரசு சாதாரண பஸ்களிலும், டவுன் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அரசு டவுன் பஸ்களையும், சாதாரண பஸ்களையும் பல நிறுத்தங்களில் நிறுத்த முடிவதில்லை. குறிப்பாக காவரை கிராம பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்களை நிறுத்துவதில்லை. இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லுாரிக்கு வரும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தனியார் பஸ்களிலும், ஆட்டோவிலும் வந்து செல்கின்றனர்.