நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி வட்டார வள மையத்தில், செஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
செஞ்சி தேர்தல் துணை தாசில்தார் சந்திரமோகன் தலைமை தாங்கினார். மேல்மலையனூர் தேர்தல் துணை தாசில்தார் நூர்ஜஹான் முன்னிலை வகித்தார்.
இதில் ஓட்டுச் சாவடி மேற்பார்வையாளர்கள், நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயரை நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், புதிய வாக்காளர்களை சேர்த்தல் நடவடிக்கைகள் குறித்து முதுநிலை உதவியாளர் சரவணன் விளக்கினார்.
மேற்பார்வையாளர்களுக்கு திறன் சோதனை தேர்வு நடந்தது. மேல்மலையனூர் தேர்தல் முதுநிலை உதவியாளர் செல்வம் நன்றி கூறினார்.