/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எழுத்தறிவு திட்ட மையத்தில் சப் கலெக்டர் ஆய்வு
/
எழுத்தறிவு திட்ட மையத்தில் சப் கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 10, 2025 03:46 AM

விழுப்புரம்: கோலியனுார் அருகே எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை சப் கலெக்டர் வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.
கோலியனுார் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் ஒன்றிய தொடக்கப் பள்ளி நுாற்றாண்டைக் கடந்த பள்ளியாக உள்ளது.
இந்த பள்ளி வளாகத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை, நேற்று முன்தினம் சப் கலெக்டர் வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு கற்போரிடம், இந்த திட்டம் மூலம் அவர்கள் கற்றுகொண்ட விபரங்களை கேட்டறிந்தார். எண்கள், தமிழ் எழுத்துக்கள், கையொப்பமிடுதலை ஆய்வு செய்தார். ரூபாய் நோட்டுகளை, காட்டி அதன் மதிப்புகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் இந்திய வரைபடத்தை காண்பித்து, மாநிலங்களின் பெயர், சிறப்புகள், திசைகள் ஆகியவை கற்போருக்கு தெரிந்துள்ளதா என சோதித்து பார்த்தார்.
கற்போருக்கு பண பரிவர்த்தனைகள் எளிதாக செய்யும் வசதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஏ.டி.எம்., பயன்படுத்துல், வங்கிக்கு சென்று சலான் நிரப்புதல் ஆகியவற்றில் பயிற்சிகளை அதிகளவு கொடுக்க அறிவுறுத்தினார்.
மையத்தில் உள்ள கோலியனுார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்திரசேகர், ஆசிரிய பயிற்றுநர் வெண்ணிலா, பொறுப்பு தலைமை ஆசிரியை செல்வி, ஆசிரியை சீத்தாலட்சுமி, தன்னார்வலர் சத்யா ஆகியோரை சப் கலெக்டர் பாராட்டினார்.

