/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சார் பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணி துவக்கம்
/
சார் பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணி துவக்கம்
ADDED : ஆக 12, 2025 02:43 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
திண்டிவனம், நேரு வீதி, கருவூல வளாகத்தில், வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய இணை (2) சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், மாவட்ட அவைத் தலைவர் சேகர், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், கவுன்சிலர்கள் பாபு, பிர்லா செல்வம், பாஸ்கர், ஷபியுல்லா, முன்னாள் நகர செயலாளர் கபிலன், வழக்கறிஞர்கள் அசோகன், வேலாயுதம், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.