/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ்சில் 'திடீர்' புகை : பயணிகள் ஓட்டம்
/
அரசு பஸ்சில் 'திடீர்' புகை : பயணிகள் ஓட்டம்
ADDED : நவ 01, 2025 02:48 AM

விழுப்புரம்: அரசு பஸ்சில் திடீரென கரும்புகை வெளியேறியதால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான புதுச்சேரி செல்லும் பஸ் நேற்று காலை 6:15 மணிக்கு வழக்கம் போல் புறப்பட்டு சென்றது.
இந்த பஸ், ரயில் நிலைய நிறுத்தம் அருகே வந்த போது, திடீரென பஸ்சின் முன்பகுதியில் அதிகளவில் கரும்புகை வெளியேறி, வாகனத்தை சூழ்ந்தது. இதையடுத்து டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்தினார். தொடர்ந்து பஸ்சில் பயணித்த, 42 பயணிகள் அலறியடித்து கொண்டு வெளியேறி ஓடினர்.
தகவலறிந்த அரசு போக்கு வரத்து கழகத்தை சேர்ந்த மெக்கானிக் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சை பார்த்தனர். அப்போது, அதில் டீசல் பகுதியில் இருந்து எஞ்சினுக்கு செல்லும் கனெக்டர் பழுதாகியிருந்தது தெரியவந்தது.
பின் பழுது நீக்கப்பட்டு, அந்த பஸ் போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்சில் இருந்து வெளியேறிய பயணிகள், மாற்று பஸ் மூலம் பத்திரமாக அனுப்பப்பட்டனர்.

