ADDED : நவ 26, 2025 07:25 AM
வானுார்: வானுார் அருகே அரசு பள்ளிக்கு செல்லும் பின்பக்க வழி மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வானுார் அடுத்த குன்னம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 100கும் மேற்பட்ட மாணவர்கள் படிக் கின்றனர். பள்ளிக்கு செல்ல இரு பகுதிகளில் நுழைவு வாயில் உள்ளது. இதில் பின்புற நுழைவு வாயில் மூடப்பட்டது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்கள் அந்த வழியில் செல்ல முடியாததால், வகுப்பிற்கு செல்லாமல் அங்கு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வானுார் இன்ஸ்பெக்டர் சத்தியா மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தியிடமும் விளக்கம் கேட்டனர். பின்பக்க வழியில் மழையால் நீர் தேங்கி உள்ளது. ஆபத்தை கருத்தில் அந்த வழி அடைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி நேரங் களில் மட்டும் கேட் திறந்து வைப்பதற்கு ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.

