/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திடீர் கோடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து...சேதம்; நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் பாதிப்பு
/
திடீர் கோடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து...சேதம்; நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் பாதிப்பு
திடீர் கோடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து...சேதம்; நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் பாதிப்பு
திடீர் கோடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து...சேதம்; நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் பாதிப்பு
ADDED : மே 19, 2025 11:20 PM

விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு 95 இடங்களில், அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இதில், மாநில அரசு சார்பில் 59 இடங்களிலும், மத்திய அரசு சார்பில் 27 இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 9 நிலையங்கள் மூடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணிநடந்து வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பெரும்பாலும் திறந்த வெளியில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், கடும் கோடை வெயிலுக்கு இடையே திடீரென கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து மற்றும் கொள்முதல் செய்வதிற்காக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை அடுக்கி வைத்தும், நெல் குவியலாக திறந்த வெளியில் கொட்டி வைத்திருந்தனர். திடீர் மழையில் நெல் முழுவதும் நனைந்து சேதமடைந்தது.
விழுப்புரம் காணை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையில் நனைந்து சேதமடைந்தன.
மழைநீரில் நனைந்த நெல் மூட்டைகளை பிரித்து, உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மீதமுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க, பிளாஸ்டிக் தார்பாலின் மூலம் மூடி வைத்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களாக நுாற்றுக்கணக்கான விவசாயிகளின் உழைப்பால் உருவான நெல், கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக, அங்கு அடுக்கி வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதே போல், திண்டிவனம் அருகே ஆட்சிப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் கொள்முதல் செய்வதற்காகவும் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது.
விழுப்புரம், செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர் வட்டாரங்களிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், திடீர் கோடை மழையால் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை நனைந்து சேதமடைந்துள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் குடோனுக்கு கொண்டு செல்லாமல், திறந்த வெளியில் அடுக்கி வைத்திருந்ததே மழையில் நனைந்து வீணாகியதிற்கு காரணம்.
விவசாயிகள் உலர வைக்கும் நெல் மணிகளும் மழையில் நனைந்தவை என்பாதல் முளைக்க துவங்கி உள்ளது. சில இடங்கில் மழையின்போது சூறை காற்று வீசியதால், நெல் மூட்டைகள் மீது மூடியிருந்த தார் பாய்கள் காற்றில் பறந்ததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யம் நெல் மூட்டைகளை தினசரி குடோனுக்கு எடுத்து செல்லவும், நெல் மூட்டைகளை பாதுகாக்க கூடுதலான கிடங்குகள், ஷெட் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.