/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு விவசாயிகள் பயிற்சி முகாம்
/
கரும்பு விவசாயிகள் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 24, 2025 09:50 PM
விழுப்புரம்; கரும்பு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வளவனுார், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கோட்ட அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.
இதில் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு துறை விஞ்ஞானி செந்தமிழ் தலைமை தாங்கினார். அவர் 'போகோ போயிங்' நோய் அறிகுறிகள், எதிர்ப்புத் திறன் கொண்ட கரும்பு ரகங்கள், நோய் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் விதை நுட்பவியல் விஞ்ஞானி விஜய கீதா, கரும்பில் உர மேலாண்மை மற்றும் கரும்பு கழிவுகள் மட்கும் தொழில்நுட்பம் குறித்து பேசினார்.
ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கோட்ட பொதுமேலாளர் ஜெயராமன், உதவி பொதுமேலாளர்கள் சிவாஜிகணேசன், ராஜப்பா , பாலாஜி, உதவி மேலாளர் தேவராஜ், கரும்பு அலுவலர் ஞானசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் முண்டியம்பாக்கம், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை இணைந்து முகாமை நடத்தியது.