/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பில் பூச்சி நோய் தடுப்பு செயல் விளக்க கூட்டம்
/
கரும்பில் பூச்சி நோய் தடுப்பு செயல் விளக்க கூட்டம்
கரும்பில் பூச்சி நோய் தடுப்பு செயல் விளக்க கூட்டம்
கரும்பில் பூச்சி நோய் தடுப்பு செயல் விளக்க கூட்டம்
ADDED : ஜூலை 02, 2025 11:49 PM

திருவெண்ணெய்நல்லுா : திருவெண்ணெய்நல்லுாரில் கரும்பு பயிரில் பூச்சி நோய் தடுப்பு குறித்து செயல் விளக்க கூட்டம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிர் செய்துள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்து வருவதால் கரும்பில் அதிக அளவு பூச்சி தாக்கப்பட்டு அதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை விவசாயிகள் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் முத்து மீனாட்சியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலுார் கரும்பு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிறுமதுரை கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நேரடியாக வர வைக்கப்பட்டனர். அவர்களின் ஆலோசனையின் பேரில் பூச்சி நோய் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களுக்கு நோய் கட்டுப்படுத்தும் மருந்து தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து அலுவலர்கள், உதவியாளர்கள் மூலம் கரும்பு பயிரிட்டு உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று விவசாயிகளுக்கு பூச்சி தாக்காதவாறு மருந்து தெளிக்க செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.