ADDED : மே 14, 2025 11:24 PM

வானுார்: குயிலாப்பாளையம் குயிலை கல்விக்கூடத்தில், கோடைகால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி முகாம் துவங்கியது.
ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தில் குயிலை கல்விக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோடை கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான கோடை கால பயிற்சி முகாம் துவங்கியது. இதில், கின் ரியு கராத்தே டூ இந்தியா, ஜான்லி கராத்தே கிளப் சார்பில், சென்சாய் லெனின் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
ஆசான் லெனின் வீரன், அவரது மாணவர் யாஷ்வின் ஆகியோர் மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கின்றனர். இதில் 60 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில், குயிலை கல்விக் கூடம் நிறுவனர் ராம்குமார், முருகன், கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.