ADDED : ஜன 05, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் தாலுகாவில் வேளாண் திட்டப்பணிகளை வேளாண் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
மேல்மலையனுார் அடுத்த கடலி கிராமத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் விவசாயி சாதிக் பாஷா நிலத்தில் பாரம்பரிய விதைகளை மற்ற விவசாயிகளுக்கு வழங்கும் பணி குறித்து வேளாண் துணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வளத்தியில் மணி என்பவரின் நிலத்தில் 3 ஏக்கரில் மேம்படுத்பட்ட வெள்ளை பொன்னி நெல் விதைப்பண்ணை, உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடத்தி, ஆலோசனை வழங்கினார்.மேல்மலையனுார் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்புகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உளுந்து மினி கிட்டுகளை முழு மானியத்துடன் வழங்கினார்.
ஆய்வின்போது,தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன், உதவி இயக்குனர்கள் சுரேஷ், பிரியா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.