sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

/

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது


ADDED : ஏப் 24, 2025 07:28 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டா மாற்றத்திற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அருகே நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ, 45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் வீடுகட்ட மனை வாங்கினார்.

அந்த மனையை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்யக்கோரி, நில அளவையர் ஸ்டாலின்,27; நரையூரை சேர்ந்த கிராம உதவியாளர் கிருஷ்ணன்,54; ஆகியோரை அணுகினார்.

அதற்கு, இருவரும், ரூ.3,000 லஞ்சம் கேட்டு, பணத்தை வளவனுார் குமாரகுப்பம் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே வந்து தரும்படி தெரிவித்தனர். ராஜூ இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் அறிவுரையின்படி, வளவனுார் குமாரகுப்பம் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே நின்றிருந்த ஸ்டாலின், கிருஷ்ணனிடம், ரசாயன பொடி தடவிய பணத்தை ராஜூ கொடுத்தார்.

பணத்தை வாங்கிய போது, லஞ்சஒழிப்பு துறை டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ஸ்டாலின், கிருஷ்ணனை மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us