/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் சுவாதி வழிபாடு
/
லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் சுவாதி வழிபாடு
லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் சுவாதி வழிபாடு
லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் சுவாதி வழிபாடு
ADDED : நவ 01, 2024 11:34 PM
விழுப்புரம்: வாணியம்பாளையம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் சுவாதி வழிபாடு நடந்தது.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தில் உள்ள கனகவல்லி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், நேற்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு பகல் 12:00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சுவாதி ஹோமங்கள் நடந்தது.
மூலவர் மற்றும் உற்சவர் லட்சுமி நரசிம்மர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு, முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 6:00 மணியளவில், சுவாதி நட்சத்திர சிறப்பு தீபாராதனை நடந்தது. முன்னதாக, யோக நரசிம்மர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.