/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீவனுார் விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
/
தீவனுார் விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED : மே 17, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமமும், 108 சங்காபிஷேகம் நடந்தது. இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

