UPDATED : நவ 26, 2026 05:53 PM
ADDED : நவ 26, 2026 05:53 PM

திண்டிவனம்: பொதுப்பாதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை குறித்து, தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
திண்டிவனம் அருகே உள்ள கொடியம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலின் தெற்கு பகுதியில், பிரதான சாலையில் இருந்து மருதம் தாங்கல் ஏரிக்கு செல்லும் விவசாய பாதை மற்றும் ஒரு பகுதி மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஞானசவுந்தரி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். விவசாய மக்கள் பொதுப்பயன்பாட்டில் இருந்து வரும் பாதையை அடைக்காமல் பொதுப்பதையாகவே தொடர வேண்டும் என தாசில்தார் கூறினார். கொடியம் கிராமத்தில் இரு தரப்பினரும் சுமூக சூழ்நிலையை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அமைதி காக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
