
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கலெக்டரின் நேர்முக உதவியாளராக வேளாண் துணை இயக்குனர் சரவணன் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் கலெக்டரின் (விவசாயம்) நேர்முக உதவியாளராக பணிபுரிந்தவர் பிரேமலதா.
இவர் மயிலாடுதுறை கலெக்டரின் (விவசாயம்) நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குனராக பணிபுரிந்து, துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்ற சரவணன், விழுப்புரம் கலெக்டரின் (விவசாயம்) நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, சரவணன் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

